சென்னை அணியின் மோசமான ஆட்டம்! டோனியின் மகள் ஜிவாவுக்கு மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன் கைது

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
338Shares

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்ததாக 16 வயதான பள்ளி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோனியின் ஆட்டம் சரியாக அமையவில்லை. இதனால் கோபம் அடைந்த ரசிகர்களில் பலர் எல்லைத் தாண்டியுள்ளனர்.

அதாவது யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு டோனி மகள் ஜிவாவுக்கு பலாத்கார மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் டோனியின் ஐந்து வயது மகளுக்கு இன்ஸ்டாகிராமில் அநாகரிகமான முறையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கட்ச் பகுதியின் முந்த்ராவைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

அவர் தான் அந்தக் கருத்துகளை வெளியிட்டதாக ஒப்புக்கொண்டார் என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்