என் வாழ்க்கைக்கான பெண்ணிற்கு வாழ்த்துக்கள்! மனைவி குறித்து உருகிய இலங்கை கிரிக்கெட் வீரர்.. புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திசரா பெரேரா தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 164 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2000க்கும் அதிகமான ஓட்டங்களை எடுத்துள்ளவர் திசரா பெரேரா.

இவர் இலங்கை அணிக்காக 81 டி20 போட்டிகளிலும் விளையாடி தனது கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

பெரேராவும் ஷிராமி என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர்.

இந்த நிலையில் மனைவியின் பிறந்தநாளையொட்டி அவருடன் இருக்கும் புகைப்படத்தை பெரேரா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், என் வாழ்க்கையான பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்