கிரிக்கெட் விளையாட்டில் அசத்தும் 7 வயது சிறுமி! அப்படி என்ன செய்துவிட்டாள்? பாராட்டி தள்ளும் பிரபல வீரர்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவை சேர்ந்த 7 வயது சிறுமி கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பார்த்து பிரபல வீரர்கள் பாராட்டியுள்ளனர்.

அரியானா மாநிலம், ரோத்தக்கை சேர்ந்த 7 வயது சிறுமி பரி சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த அதிரடி கிரிக்கெட் விளையாடும் முறையை பார்த்து அசந்து போனார்கள் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் உசேன், மைக்கேல் வாகன், மைக் ஆதர்டன் உள்ளிட்டோர்.

இவர்கள் இந்த சிறுமியை பாராட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதுடன் அந்த சிறுமி விளையாடும் கிரிக்கெட் ஆட்டம் அடங்கிய வீடியோவை மறுடிவிட்டும் செய்துள்ளனர். இதற்கும் ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளன. அந்த வீடியோவில் கிரிக்கெட் பேட் உயரமே உள்ள அந்த 7 வயது சிறுமி பரி சர்மா ஸ்டம்புகளுக்கு முன் பேட்டுடன் காத்திருக்கிறார்.

வருகிற பந்தில் அவுட் ஆகப் போகிறார் என நாம் எதிர்பார்க்கும் வேலையில் அந்த சின்னஞ்சிறுமி லாவகமா பேட்டை சுழற்றி அடித்ததில் அந்த பந்து பவுண்டரியை தொடுகிறது.

இதற்காக அவர் தனது வீட்டின் ஹாலையே மைதானமாக தேர்ந்தெடுத்துள்ளார். கயிறு ஒன்றில் கட்டப்பட்டுள்ள பந்து சுவரில் மோதி திரும்பி வருகிறது. அப்போது எதிரே தயாராக நிற்கும் பரி சர்மா பந்தை விளாசி பவுண்டரிகளாகவும் சிக்சராகவும் அடித்து நொறுக்குகிறார்.

இவரது பயிற்சியாளர் அவரின் தந்தை பிரதீப் சர்மா. காலை 5 மணிக்கு எழுந்து தந்தையுடன் பயிற்சியை தொடங்குகிறார் பரி சர்மா. அப்பா வெளியே சென்றிருந்தால் கயிற்றில் கட்டப்பட்ட பந்து கொண்டு பயிற்சி எடுக்கிறாள். ‘‘அந்த பந்து சுவரில் மோதி வரும்போது எதிர்கொண்டு தாக்குவேன்.

மாலையிலும் இரவிலும் கூட கிரிக்கெட் தான் விளையாடுவேன். எனக்கு இந்திய வீரர்கள் கோஹ்லி மற்றும் டோனியின் அதிரடி ஆட்டம் பிடிக்கும். பெண்கள்அணியில் ஹர்மந்த் பிரித் கவுரின் ஸ்டைல் பிடிக்கும் என்றார் மழலை மாறாமல் பரி.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்