யாராலும் அவரைப் போன்று விளையாட முடியாது: சஞ்சு சாம்சன் தன்னடக்கம்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

டோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது... அவரைப் போன்று விளையாடவும் முயற்சிக்க முடியாது என ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரா் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளாா்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடி வருகிறாா். சென்னைக்கு எதிராக 74 ஓட்டங்களும், பஞ்சாபுக்கு எதிராக 85 ஓட்டங்களும் குவித்து ராஜஸ்தானுக்கு வெற்றி தேடித்தந்தாா்.

இந்த நிலையில் கேரளத்தைச் சோ்ந்த சசிதரூா் எம்.பி. உள்ளிட்டோா் இந்தியாவின் அடுத்த டோனி என சஞ்சு சாம்சனை பாராட்டியிருந்தனா்.

அதை மறுத்துள்ள சாம்சன், டோனியைப் போன்று யாராலும் விளையாட முடியாது; அவரைப் போன்று விளையாடவும் முயற்சிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

அதனால் டோனியோடு ஒப்பிடுவதை புறந்தள்ளிவிடுங்கள். டோனியைப் போன்று நான் விளையாடியதாக ஒருபோதும் நினைத்ததில்லை.

டோனி இந்திய கிரிக்கெட்டின் சகாப்தங்களில் ஒருவர். நான் என்னுடைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.

என்னால் என்ன செய்ய முடியும்? எப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்? எப்படி ஆட்டத்தை வென்று தர முடியும் என்பதை மட்டுமே சிந்திக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்