என் வாழ்நாள் முழுவதும் அந்த ஆசை இனி நிறைவேறாமல் இருக்கும்! S.P.B மரணத்தால் தினேஷ் கார்த்திக் உருக்கம்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணி வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் எஸ்.பி.பி மரணம் குறித்து மிகுந்த வேதனையுடன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலையும், அவருடன் கழித்த நாட்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய அணி கிரிக்கெட் வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நேற்றும் இன்றும் அடுத்தடுத்து இரங்கல் செய்திகள் வருகிறது.

நேற்று இறந்த வர்ணனையாளார் டீன் ஜோன்சை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் அவருக்கு சாக கூடிய வயது கிடையாது. கிரிக்கெட் உலகின் மிக முக்கியமான, துள்ளலான நபர் நேற்று இறந்துவிட்டார். இன்றும் இன்னொரு துக்க செய்தி வந்துள்ளது.

எனக்கு விருப்பமான, மிகவும் பிடித்த கலைஞர் இன்று இறந்துவிட்டார். பாடகர் எஸ்.பி.பியை நான் கலைஞர் என்றுதான் குறிப்பிடுவேன்.

அவர் சிறந்த கலைஞர். இந்திய சினிமா உலகில் சிறந்த, பன்முகத்தன்மை கொண்ட பாடகர் நீங்கள். இந்த உலகம் உங்களை எப்போதும் நினைவில் வைத்து இருக்கும். எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது.

நான் உங்கள் வீட்டிற்கு வந்த போது, நீங்கள் எனக்காக எனக்கு விருப்பமான பாடலை தனியாக பாடி காட்டினீர்கள். அந்த நாளை மறக்கவே மாட்டேன்.

எனக்கு அதேபோல் உங்களிடமிருந்து இன்னொரு முறை பாட்டு கேட்க வேண்டும் என ஆசை. ஆனால் அந்த ஆசை மட்டும் வாழ்நாள் முழுக்க எனக்கு நிறைவேறாத கனவாக இருக்க போகிறது.

நீங்கள் இப்போது எங்களை விட்டு சென்றுவிட்டீர்கள். உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் என மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்