தாய், மனைவியை கழுத்தறுத்து கொன்ற முன்னாள் வீரர்: மகனிடம் போனில் சொன்ன அதிர்ச்சிகர தகவல்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

அமெரிக்காவில் தாய், மனைவி இருவரையும் கொன்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய முன்னாள் வீரர் இக்பால் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

1983ம் ஆண்டு நடந்த ஆசிய தடகளப் போட்டிகளில் ஷாட் புட் பிரிவில் வெண்கலம் வென்றவர் இக்பால் சிங்.

அதன்பின்னர் அமெரிக்காவுக்கு சென்றவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த திங்களன்று மகனுக்கு போன் செய்த இக்பால் சிங், உன்னுடைய அம்மாவையும், பாட்டியையும் நான் கொன்றுவிட்டேன், பொலிசுக்கு சொல்லிவிடு என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மகன் உடனடியாக பொலிசுக்கு தகவல் அளிக்க, நியு டவுன்ஷிப்பில் வசித்து வரும் இக்பாலின் வீட்டுக்கு பொலிஸ் சென்ற போது இருவரின் சடலங்கள் கிடந்துள்ளது.

இக்பாலும் தன்னை காயப்படுத்திக் கொண்டதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே இக்பாலின் மீது 3ம் தர கொலை வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

எதற்காக தாய், மனைவியை கொலை செய்தார் என்பதற்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்