இந்திய ஹொக்கி அணித்தலைவர் உட்பட 5 வீரர்களுக்கு கொரோனா..!

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
33Shares

இந்திய ஹாக்கி அணித்தலைவர் மன்பிரீத் சிங் உட்பட ஐந்து இந்திய ஹாக்கி வீரர்கள் கொரோனா உறுதி செய்ததாக இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய ஹாக்கி அlணித்தலைவர் மன்பிரீத், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண் குமார் மற்றும் கிருஷன் பி பதக் ஆகியோரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மாத ஓய்வுக்கு பிறகு வீரர்கள் பெங்களூருவில் உள்ள பயிற்சி தளத்திற்கு திரும்பிய போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியானது. மேலும் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

பயறிசி தளத்திற்கு திரும்பிய மன்பிரீத் மற்றும் சுரேந்தர் கொரோனா அறிகுறிகளைக் காட்டிய பின்னர் 10-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு இரண்டாவது முறையாக சோதனை செய்யப்பட்டது என்று இந்திய விளையாட்டு ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது தனிமைப்படுத்தப்பட்ட விளையாட்டு வீரர்கள் ஏற்கனவே பயிற்சி தளத்தில் இருந்த மற்ற விளையாட்டு வீரர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை, சில வீரர்களின் சோதனை முடிவுக்கு காத்திருக்கிறோம் என்று இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

வீரர்கள் தங்கள் சொந்த ஊரிலிருந்து பெங்களூருக்கு செல்லும்போது வைரஸ் பாதித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா சோதனையை கட்டாயமாக்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று இந்திய ஹாக்கி அணித்தலைவர் மன்பிரீத் கூறினார்.

இந்த செயல்திறன்மிக்க நடவடிக்கை சரியான நேரத்தில் சிக்கலை அடையாளம் காண உதவியது. நான் நன்றாக இருக்கிறேன், விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன் என மன்பிரீத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்