இது வித்தியாசமான காதல்! கை கால்களை நீட்டி இந்திய அணி வீரர் ரோகித் சர்மாவும் அவர் மனைவியும் வெளியிட்டுள்ள புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

இந்த புகைப்படம் வழக்கமானது அல்ல. வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ரோகித் மற்றும் அவரது மனைவி ரித்திகா இருவரும் ஒரே மாதிரி போஸ் கொடுத்துள்ளது போல அதில் உள்ளது.

அந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரோகித் சர்மா, காதலில் உள்ள விசித்திரமானவர்கள் என்று கேப்ஷனுடன் இன்ஸ்டாவில் பதிந்துள்ளார்.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரும் குறைந்த ஓவர்கள் போட்டியின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா, இந்த லாக் டவுன் சமயத்தில் தன்னுடைய மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைராவுடன் சிறப்பாக பொழுதை போக்கி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவர் அவ்வப்போது வெளியிட்டுவரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் இதை அறியலாம்.

தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவி ரித்திகா மற்றும் தான் வித்தியாசமான காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வெளிப்படுத்தியுள்ள வித்தியாசமான போஸ் குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் ரோகித் மைதானத்தில் பயிற்சியின்போது கை கால்களை வித்தியாசமாக வைத்து போஸ் கொடுத்துள்ளார். அதேபோல தனது வீட்டில் ரித்திகா போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்