தந்தையான இந்திய கிரிக்கெட் அணி வீரர்! குழந்தையை கையில் ஏந்தி வெளியிட்ட முதல் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர். களத்தில் மட்டுமில்லாமல், வாழ்விலும் திடீரென அதிரடியில் இறங்கி தன் காதலி நடாஷா ஸ்டான்கோவிக்கை யாருக்கும் சொல்லாமல் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் செய்து கொண்டார் ஹர்திக் பாண்டியா

2020 ஜனவரி 1ஆம் திகதி திடீரென ஹர்திக் பாண்டியா, தன் காதலி நடாஷா ஸ்டான்கோவிக்குடன் படகில் வைத்து நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

லாக்டவுனுக்கு இடையே மே 31 அன்று ஹர்திக் பாண்டியா - நடாஷா ஸ்டான்கோவிக் திருமணம் எளிய முறையில் வீட்டிலேயே நடைபெற்றது. அதுவும் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாகவே அமைந்தது. அப்போது நடாஷா ஸ்டான்கோவிக் கருவுற்று இருக்கும் தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில், ஜூலை 30 (வியாழக்கிழமை) அன்று ஹர்திக் பாண்டியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை பகிர்ந்து கொண்டார்.

இந்த சூழலில் குழந்தையுடன் தான் இருக்கும் முதல் புகைப்படத்தை அவர் டுவிட்டரில் இன்று பகிர்ந்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்