இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் தனது கர்ப்பிணி காதலி நடாஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அவர் ஹர்திக் குறித்து உருகியுள்ளார்.
பாண்டியா மற்றும் நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் இருவரும் தங்களது நிச்சயதார்த்தத்தை கடந்த ஜனவரி 1ம் திகதி அறிவித்தனர். மேலும் கடந்த மாதத்தில் நடாஷா கர்ப்பம் தரித்திருப்பதையும், தங்களது வீட்டில் புதிய நபரை எதிர்பார்ப்பதாகவும் ஹர்திக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தன்னை முழுமையடைய செய்துள்ளதாக நடாஷா ஸ்டான்கோவிக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாக இந்த ஜோடி அமைந்துள்ளது. அடிக்கடி இருவரும் இணைந்து புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தன்னை முழுமையடைய செய்துள்ளதாக நடாஷா ஸ்டான்கோவிக் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் இருவரும் இணைந்திருக்கும் அழகான புகைப்படம் ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார். அந்த புகைப்படத்திற்கான ஸ்டைலிஸ்ட்கள் மற்று உடையலங்காரம் செய்தவர்களையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதே போல டுவிட்டரில் ஹர்திக் நடாஷாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
💐💝🥰 pic.twitter.com/WuPr5BbEIU
— hardik pandya (@hardikpandya7) July 19, 2020
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்