மெஸ்ஸியை விட ரொனால்டோ தான் கெத்து..! காரணத்தை விளக்கிய விராட் கோஹ்லி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

மெஸ்ஸிடை விட ரொனால்டோவை எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர் என தான் விரும்புவதற்கான காரணத்தை இந்திய கிரக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி விளக்கியுள்ளார்.

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் இங்கிலாந்து நட்சத்திரம் கெவின் பீட்டர்சன் கோஹ்லி உடனான இன்ஸ்டாகிராம் நேரலை கலந்துரையாடலின் போது மெஸ்ஸி-ரொனால்டோ இருவரில் தனக்கு பிடித்த கால்பந்து வீரரை தெரிவு செய்யுமாறு கோரினார்.

உடனே ரொனால்டோ என கோஹ்லி பதிலளித்தார். அதற்கான காரணம் குறித்து விளக்குமாறு பீட்டர்சன் கோரினார்.

நான் அவரது பணி நெறிமுறை மற்றும் அனைத்து தந்திரங்களையும் திசைதிருப்பும் திறனை விரும்புகிறேன் என விளக்கமளித்துள்ளார்.

கடந்த காலங்களில் எல்லா காலத்திலும் சிறந்த வீரர் விவாதத்தைப் பற்றி கோஹ்லியிடம் கேட்கப்பட்ட போதெல்லாம், அவர் எப்போதுமே ரொனால்டோவை வெற்றியாளராகத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் காக்கா, ரொனால்டோவை விட மெஸ்ஸி தான் சிறந்த வீரர் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்