4 வருடமாக தோழியுடன் காதல்: திருமணத்தை ஒத்தி வைத்த வீராங்கனை

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீராங்கனை லிஸல் லீ தன்னுடைய திருமணத்தை ஒத்தி வைத்துள்ளார்.

28 வயது லிஸல் லீ, தென் ஆப்பிரிக்க அணிக்காக ஒரு டெஸ்ட், 82 ஒருநாள், 74 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடன் 4 வருடங்கள் பழகிய தன்ஜா குரோனியா மீது லிஸல் லீக்கு காதல் மலர்ந்தது.

தங்களுடைய உறவு சாதாரணம் என்றாலும் பெற்றோரிடம் கூறி சம்மதம் வாங்க சிரமப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் வருகிற 10 ம் திகதி திருமணம் நடைபெறுவதாய் இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் 2006ம் ஆண்டு ஓரினச்சேர்க்கை திருமணம் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்