சின்ன தல ரெய்னா- உருக்கத்துடன் வெளியிட்ட பதில்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எப்போதும் தனி மவுசு உண்டு, ரசிகர்கள் பட்டாளமும் அதிகம் என்று கூறலாம்.

அணியில் விளையாடும் வீரர்களுக்கு செல்ல பெயரை வைத்தும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

டோனிக்கு “தல”, ஹர்பஜன் சிங்க்கு “புலவர்”, ரெய்னாவுக்கு “சின்ன தல” என அழைக்கின்றனர்.

இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போகல் ரெய்னாவிடம் ட்விட்டரில் கேள்வி ஒன்றை கேட்டார்.

அதில், ''ஒருமுறை தல என்ற செல்லப்பெயர் குறித்து நான் டோனியிடம் கேட்டேன். நீங்கள் சின்ன தல என்று அழைக்கப்படும் போது எப்படி உணர்கிறீர்கள்?'' எனக் கேட்டார்.

இதற்கு பதிலளித்த ரெய்னா, என்னுடைய சொந்த வீட்டை போன்று உணர்கிறேன், எனக்காக சென்னை குடும்பம் தந்த அன்பு, மரியாதை என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்