சச்சின், டோனி, கோஹ்லி... வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விளையாட்டு வீரர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பிரபலங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர், டோனி, விராட் கோஹ்லி, கங்குலி, சேவாக் உள்ளிட்ட 49 விளையாட்டுப் பிரபலங்களுடன் காணொலி காட்சி முறையில் ஒரு மணி நேரம் கலந்துரையாடினார் பிரதமர் மோடி.

கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமல்லாமல் விஸ்வநாதன் ஆனந்த், பி.வி. சிந்து, அபிஷேக் வர்மா, அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்ட இதர விளையாட்டுப் பிரபலங்களுடனும் உரையாடிய மோடி, கொரோனா பாதிப்பிலிருந்து காத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை மக்களுக்குத் தெரியப்படுத்துமாறு பிரபலங்களிடம் வேண்டுகோள் விடுத்தார். குறைந்த நேரமே இருந்ததால் மோடியுடன் 9 வீரர்கள் மட்டுமே உரையாட முடிந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்