ஹர்பஜன் சிங் மீது 'மரியாதை இழந்தோம்' - விமர்சனங்களுக்கு பதிலளித்த யுவராஜ்

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து யுவராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் நிதியுதவி அளித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு, இந்திய கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கு வீடியோவழியாக ஹர்பஜன் மக்களுக்கு வலியுறுத்தினார். யுவராஜ் தனது டிவிட்டர் பதிவில் “இவை சோதனை நேரங்கள், ஒருவருக்கொருவர் கவனித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது” என்று குறிபிட்டு நிதியுதவி கோரியிருந்தார்.

இந்தியா பாகிஸ்தான் எதிரிநாடுகள் போல் நடந்துவரும் நிலையில், யுவராஜ் மற்றும் ஹர்பஜன் இதுபோன்று கோரிக்கை வைத்தது இந்திய ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதில் ஒருவர், “உங்களுக்கு ஏதாவது புத்தி இருக்கிறதா?" என்று கேட்க, மற்றொருவர் ஹர்பஜன் சிங் மீது “மரியாதை இழந்தோம்” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து “மன்னிக்கவும் தோழர்களே, உங்களுக்கு அறிவு கெட்டு விட்டது,” என்று மற்றொருவர் பதிலளித்தார். இவ்வாறு தொடர்ந்த அந்த டிவிட்டர் பதிவுக்கு தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார் யுவராஜ்சிங்

அதில் “பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் படி கேட்ட மெசேஜ் எவ்வாறு இப்படி மாறப்படுகிறது என்பது எனக்குப் புரியவில்லை. அந்தச் செய்தியின் மூலம் நான் அடைய முயன்றதெல்லாம், நமது சொந்த நாடுகளில் உள்ளவர்களுக்குச் சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம் உதவுவதேயாகும். எனது நோக்கம் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது அல்ல. நான் ஒரு இந்தியன். அதற்காகத் தான் போராடுவேன் மற்றும் எப்போதும் மனிதநேயத்திற்காக நிற்பேன். ஜெய் ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்