ஊரடங்கு உத்தரவால் கஷ்டப்படும் மக்கள்!.. நிதி திரட்டும் சானியா மிர்சா

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியா கொரோனா நோயை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில் 21 நாள் ஊடரங்கு உத்தரவால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு சாப்பாடு வழங்குதல் போன்ற அடிப்படை வசதிகளை தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா இதுபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்.

இதற்காக தன்னுடன் சிலரை இணைத்துக் கொண்டு தொண்டு செய்யவும் ஆரம்பித்துள்ளார்.

மேலும் 1 லட்சம் பேருக்கு உதவும் வகையில் 1.25 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாகவும், 10 ஆயிரம் பேருக்கு உணவு அளித்துள்ளதாகவும் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சானியா மிர்சாவின் இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்