புகழ்பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட்டின் Lancashire கிளப்பின் சேர்மன் கொரோனாவால் மரணம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் கிளப்பான புகழ்பெற்ற லங்காஷயர் கிரிக்கெட் கிளப்பின் சேர்மேன் டேவிட் ஹாட்ஜ்கிஸ் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

71 வயதான டேவிட் கடந்த 22 ஆண்டுகளாக இந்த கிளப்பில் இணைந்து திறம்பட பணியாற்றி வந்தார்.

இந்த சூழலில் கொரோனா பாதிப்பால் அவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக லங்கா ஷயர் கிரிக்கெட் கிளப் தனது அறிவிப்பில், டேவிட் தனித்துவமான முறையில் கிளப்புக்கு சேவையாற்றியுள்ளார். பொருளாளர், துணைத் தலைவர், பிற்பாடு சேர்மேன் என்று பெரிய பொறுப்புகளை திறம்படக் கையாண்டார்.

அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய சேர்மன் கோலின் கிரேவ்ஸ் கூறும்போது, லங்கா ஷயர் கிரிக்கெட்டின் மிக முக்கியமான ஒரு அங்கமாகத் திகழ்ந்தார் டேவிட். நாட்டில் விளையாட்டை வளர்க்கவும், இளையோர்களை பெரிதும் ஊக்குவிக்கவும் செய்தார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்