கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகி தனிமைப்படுத்தப்பட்ட அவுஸ்திரேலிய வீரர்... மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

நியூசிலாந்து அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பரிக்காவில் இருந்து திரும்பிய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு வியாழன் இரவு திடீரென தொண்டை வலி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவர் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்றைய போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.

இருந்த போதிலும் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

இது குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், எங்கள் மருத்துவ ஊழியர்கள் கேனுக்கு தொண்டை நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர், ஆனாலும் அவுஸ்திரேலிய அரசாங்க நெறிமுறைகளைப் பின்பற்றி அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இதனிடையில் ஒருநாள் போட்டிகளை பார்க்க கொரோனா அச்சத்தால் ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து காலியாக உள்ள மைதானத்திலேயே போட்டிகள் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்