இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் பேன் மரணம்! உலகளவில் வைரலானவர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகையும், விராட் கோஹ்லியுடன் உரையாடி வைரலானவருமான மூதாட்டி சாருதலா படேல் காலமானார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் அமர்ந்திருந்த 87 வயது மூதாட்டி ரசிகையான சாருலதா படேலை சந்தித்து இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி உரையாடிய காட்சி சமூக ஊடகங்களில் அப்போது வைரலானது.

இதோடு சாருலதாவுக்கு இந்திய அணி உற்சாக ஆதரவையும் வழங்கியது.

அவரிடம் ஆசி பெற்றது பெரும் பாக்கியம் என கோஹ்லி அப்போது கூறியிருந்தார். இந்நிலையில் சாருலதா படேல் நேற்று உயிரிழந்தார்.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சூப்பர் ரசிகையான படேல் எப்போதும் நம் இதயத்தில் இருப்பார், அவரின் கிரிக்கெட் ஆர்வம் நம்மை எப்போதும் ஊக்கப்படுத்தும்.

படேலின் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்