அவரை சந்திக்க ஆசை... கண்டுபிடிக்க உதவுங்கள்... தமிழில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட பதிவு

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னையில் தனக்கு அறிவுரை கூறியவரை கண்டுபிடிக்க உதவவேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தமிழில் பதிவு வெளியிட்டு சில நிமிடங்களில் அதை நீக்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள பதிவு வைரலானது.

அதில், எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன

IND vs WI தொடரின் போது சென்னை Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய அறிவுரை மிகவும் உதவியது.

அவரை இப்போது சந்திக்க ஆசைப்படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இதே பதிவை சச்சின் ஆங்கிலத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். ஆனால் பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சிறிது நேரத்தில் தனது இரண்டு பதிவுகளையும் அவர் நீக்கிவிட்டார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்