சானியா மிர்சாவின் தங்கைக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளையுடன் இருக்கும் அழகான புகைப்படம் இதோ

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சனியா மிர்சாவின் தங்கைக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரரான அசாரூதின் மகனுமான ஆசாத்திற்கும் கடந்த 11-ஆம் திகதி திருமணம் நடைபெற்று முடிந்தது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தவர் அசாருதீன். 1990-களில் இந்திய அணிக்காக விளையாடிய இவர், இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தவர்.

கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது வரை கட்சியில் நீடித்து வருகிறார். அதேபோல், டென்னிஸ் விளையாட்டில் மிகவும் பிரபலமானவர் சானியா மிர்சா, இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சனியா மிர்சாவின் தங்கையான Anam Mirza-வுக்கும், அசாரூதினின் மகனான Asad-க்கும் இடையே டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.

View this post on Instagram

Welcome to the family @asad_ab18 💚 #abbasanamhi

A post shared by Sania Mirza (@mirzasaniar) on

இதையடுத்து கடந்த 11-ஆம் திகதி இவர்கள் இருவருக்கும் ஹைதராபாத்தில் பெற்றோர் மற்றும் பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இந்த புகைப்படத்தை சானியமிர்சா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய, புது மண தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்