என் தங்கையுடன் தனிமையில் இருப்பார்.... சகவீரரை பற்றி மோசமாக பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளெசிஸ், தனது அணியின் வீரர் ஏன் போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்விக்கு வெளிப்படையான பதில் கொடுத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 போட்டியில் பார்ல் ராக்ஸ் அணியும் - நெல்சன் மண்டேலா கெயின்ட்ஸ் அணியும் நேற்று மோதின.

போட்டிக்கு முன்னதாக நாணய சுழற்சியின் போது, பார்ல் ராக்ஸ் அணியின் கேப்டன் பாஃப் டு பிளெசிஸிடம் அணியில் வீரர்கள் மாற்றம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், வேகப்பந்து வீச்சாளர் ஹார்டஸ் வில்ஜோயன் இன்று விளையாட மாட்டார். ஏனென்றால் அவர் நேற்று திருமணம் செய்துகொண்டதால் அவர் என் சகோதரியுடன் படுக்கையில் இருப்பார்" என வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதனை கேட்டதும் வர்ணனையாளர் பட்டென சிரித்துவிடுவார். இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் ஹார்டஸ் வில்ஜோயன் டு பிளெசிஸின் சகோதரி ரெமி ரைனர்ஸை நேற்றைக்கு முன்தினம் திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்