மனீஷ் பாண்டே திருமண விழாவில் அசத்தலாக நடனமாடிய யுவராஜ்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் மனீஷ் பாண்டே திருமண விழாவில், முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் நடனமாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டே தமிழ் நடிகை அஷ்ரிதா ஷெட்டியை திங்கட்கிழமையன்று மும்பையில் திருமணம் செய்துகொண்டார்.

திருமண விழா பிரமாண்டமாக நடைபெறவில்லை என்றாலும் கூட, செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இதில் கலந்துகொண்ட இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடி அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதனை அவருடைய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்