ஆர்வ கோளாறில் தவறு செய்த ரிஷப் பந்த்.. களத்தில் வீரர்கள் முன் திட்டி அசிங்கப்படுத்திய ரோகித்: கசிந்த காட்சி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
387Shares

வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் ஆர்வ கோளாறில் தவறாக ஸ்டம்பிங் செய்த ரிஷ்ப் பந்த்தை, கோபமடைந்த அணித்தலைவர் ரோகித் சர்மா திட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

முன்னதாக, வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் பந்த் டி.ஆர்.எஸ்-ல் செய்த தவறை ரோகித் சர்மா சிரித்துக்கொண்டே சமாளித்தார். ஆனால், 2வது டி-20 போட்டியில் ரோகித் தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளார்.

ராஜ்கோட்டில் நடந்த 2வது டி-20 போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6வது ஓவரை இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் வீசி, வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் துடுப்பாடினார். பந்தை முன்னே சென்று விளாச முயன்ற தாஸ் பந்தை தவறவிட்டார், பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் பந்த் ஸ்டம்பிங் செய்தார்.

இந்திய வீரர்கள் முதல் விக்கெட்டை கொண்டாட தொடங்கினர், அவுட் என லிட்டன் தாஸ் துடுப்பை எடுத்துக்கொண்ட எல்லை கோட்டிற்கு அருகே சென்றார். கள நடுவருக்கு பந்த் பந்த் பந்தை ஸ்டம்பிற்கு முன்னால் பிடித்தாரா என சந்தேகம் எழ, மூன்றாவது நடுவர் வீடியோ மூலம் ஆய்வு செய்தார்.

அதில், பந்த் பந்து ஸ்டம்பை தாண்டுவதற்கு முன்பே பிடித்தது தெரியவந்ததால் லிட்டன் தாஸிக்கு நாட் அவுட் வழங்கப்பட்டது. மேலும், ரிஷப் பந்த் செய்த தவறுக்கு ‘நோ பால்’ வழங்கப்பட்டது.

இதனால், கோபமடைந்த அணித்தலைவர் ரோகித் சர்மா, பந்த்தை திட்டியுள்ளார். குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்