கிரிக்கெட் போட்டியை காண இந்தியா வந்த ரசிகர்...! குவிந்த மக்கள் கூட்டம்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

கிரிக்கெட் பார்ப்பதற்காக இந்தியா வந்த எட்டு அடி உயரமுள்ள ஒரு பெரிய ஆப்கானிஸ்தான் ரசிகரை, உள்ளூர் மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரானது, இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியினை நேரில் கண்டுகளிப்பதற்காக ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஷெர் கான் என்கிற நபர் இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார்.

ஹோட்டல் உரிமையாளர்கள் அவரது 8 அடி 2 இன்ச் உயரத்தால் அறை கொடுக்க தயங்கியுள்ளனர். பல்வேறு ஹோட்டல்களில் ஏறி இறங்கிய அவர், இறுதியாக உதவிகேட்டு பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

அங்கு அவருடைய ஆவணங்களை பரிசோதனை செய்த பொலிஸார், இறுதியாக ராஜ்தானி ஹோட்டலில் தங்கவைத்துள்ளனர்.

இதற்கிடையில் இந்த தகவல் உள்ளுர் முழுவதும் பரவியதை அடுத்து, ஷெர் கானை பார்ப்பதற்காக ஒரேநாளில் 200 பேர் ஹோட்டல் முன் குவிந்துள்ளனர். இதனால் ஷெர் கான் எரிச்சலடைந்ததாக ஹோட்டல் ஊழியர் கூறியுள்ளார்.

பின்னர் பலத்த பாதுகாப்புடன் பொலிஸார் அவரை மைதானத்திற்கு அழைத்து சென்று போட்டியை காண வைத்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்