பதிலளிக்கும் போது தடங்கல் ஏற்படுத்திய மொபைல்.. கோபமடைந்த ரோகித் செய்த செயல்: வைரல் வீடியோ

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

வங்கதேச அணிக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணியை தலைவராக வழிநடத்தி வரும் ரோகித் சர்மா, பத்திரிகையாளரை கடுமையாக சாடியுள்ளார்.

முன்னதாக, முதல் டி-20 போட்டிக்கு முன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ரோகித், பதிலளிக்கும் போது குறுக்கிட்ட பத்திரிகையாளரை அமைதியாக இருக்கும் படி சாடினார்.

தற்போது, இரண்டாவது டி-20 போட்டிக்கு முன் நடந்த சந்திப்பின் போது, மொபைலை சைலண்டில் போடும் படி பத்திரிகையாளரை சாடினார்.

செய்தியாளர் சந்திப்பின் போது பதிலளித்த ரோகித், தோல்வி குறித்து இந்திய அணி கவலைப்படவில்லை, புது வீரர்களை டி-20 போட்டிகளுக்கு தயார்ப்படுத்துகிறோம்.

மேலும், இதன் மூலம் அவர்கள் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் விளையாடும் திறனை வளர்த்துக்கொள்வார்கள் என விவரித்தார்.

ரோகித் பதிலளித்துக்கொண்டிருந்த போது, திடீரென பத்திரிகையாளர் ஒருவரின் மொபைல் அடித்து தடங்கலை ஏற்படுத்தியது, கோபமடைந்து பேசுவதை நிறுத்திய ரோகித், தயவுசெய்து மொபைலை லைலண்ட்டில் போடுமாறு வலியுறுத்தினார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்