வித்யாசமான முறையில் பேட்டிங் செய்த நட்சத்திர வீரர்: வியந்து பார்த்து ரசிகர்கள்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஜார்ஜ் பெய்லி விக்கெட் கீப்பரை பார்த்தபடியே பேட்டிங் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் ஏழாவது ஷெபீல்ட் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் விக்டோரியா மற்றும் தாஸ்மேனியா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, முதலில் பேட்டிங் செய்த விக்டோரியா அணி 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின் பேட்டிங் செய்த தாஸ்மேனியா அணி முதல்நாள் ஆட்டநேரமுடிவில் 226 ரன்கள் எடுத்து, விக்டோரியா அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

தாஸ்மேனியா அணி தரப்பில் ஐந்தாவதாக களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ஜார்ஜ் பெய்லி, அவருக்கே உரித்தான அட்டகாச ஸ்டைலில் பேட்டிங் செய்தார்.

போட்டியின் 25வது ஓவரில் கிறிஸ் டிரிமெய்ன் வீசிய பந்தை எதிர்கொள்ள காத்திருந்த பெய்லி, விக்கெட் கீப்பர் பக்கம் திரும்பியவாறு வித்யாசமாக பந்தை எதிர்கொண்டார்.

இதனை அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் கண்டுகளித்தனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்