மனைவியின் கழுத்தை பிடித்து அடித்ததாரா பென் ஸ்டோக்ஸ்? வைரலாகும் புகைப்படத்திற்கு விளக்கம்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் அவருடைய மனைவியின் கழுத்தை பிடித்து அடிப்பதாகவும், பதிலுக்கு மனைவியும் அடிப்பதாக புகைப்படம் வெளியான நிலையில், அதன் உண்மை என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டு மக்களின் ஹீரோவாக இன்று பலராலும் பார்க்கப்படுவர் தான் கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ். இவர் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடர், ஆஷஸ் டெஸ்ட் தொடர் என இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினார்.

அதிலும் சாதித்தும் காட்டினார். இதனால் பென்ஸ்டோக்ஸின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் ஊடகங்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது,

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சிறந்த வீரர்களுக்கான வீரர் விருதுக்கு பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இதற்காக கடந்த வாரத்தில் தொழில் முறை கிரிக்கெட் வீரர்களுக்கான கூட்டமைப்பின் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பென் தனது மனைவி கிளார் ஸ்டோக்சுடன் கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்ச்சியில், அவர் தனது மனைவி கிளாரின் கழுத்தின் மேல் கை வைத்திருப்பது போன்ற காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் வெளியாகின. இதனால் ஸ்டோக்சுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு விட்டது எனவும், அவர் தன் மனைவியின் கழுத்தை பிடித்து அடித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனால் ஒரு கட்டத்தில் அமைதியை இழந்த ஸ்டோக்ஸ் மனைவி, தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என்ன ஒரு முட்டாள்தன தகவலை மக்கள் பரப்புகின்றனர். என்னால் நம்பவே முடியவில்லை. நானும், பென் ஸ்டோக்சும் ஒருவருக்கொருவர் எங்களது முகத்தினை பிடித்து அழுத்தினோம். ஏனெனில் எங்கள் இருவருக்கிடையே உள்ள அன்பு வெளிப்படவே நாங்கள் இப்படி நடந்து கொண்டோம்.

இது சண்டையில்லை. ஆனால் சிலர் இதனை தவறாக சித்தரித்து பரப்பி விட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் கணவர் பென்னின் முகத்தில் செல்லமுடன் அடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்