கிரிக்கெட் ஆலோசனை குழு பதவியை ராஜினாமா செய்தார் கபில் தேவ்!

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

கிரிக்கெட் ஆலோசனை குழு உறுப்பினர் பதவியை முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில்தேவ் ராஜினாமா செய்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற 50ஓவர் கிரிக்கெட் போட்டிக்குபின் இந்திய அணியின் பயிர்சியாளர் ரவிசாஸ்திரியின் பதவிகாலம் முடிவடைந்தது.

இதைதொடர்ந்து, முன்னாள் கேப்டன் கபில்தேவ், அன்ஸ்மான் கெக்த், சாந்தா ரங்கசாமி மூன்று பேர் அடங்கிய ஆலோசனை கமிட்டி உருவாக்கப்பட்டது.

அந்த குழு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை மீண்டும் பயிர்சியாளராக நியமித்தது. இந்நிலையில் இந்த கமிட்டி நிர்வாகிகள் லோதா கமிட்டியின் ஆலோசனையை மீறி, இரண்டு வழிகளில் வருமானம் பெறுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி குழுவினர்களுக்கு விளக்கம் அளிக்கும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால், நிர்வாகிகளில் ஒருவரான சாந்தா ரங்கசாமி ஏற்கனவே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கபில்தேவும் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகின்றது.

இதுதொடர்பாக பிசிசிஐ.,க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப்பயிற்சியாளரை தேர்வு செய்யும் கிரிக்கெட் ஆலோசனை குழுவிற்கு தலைமை தாங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. என் பதவியை நான் உடனடியாக ராஜினாமா செய்கிறேன்.’ என பிசிசிஐ தலைமை அதிகாரி விநோத் ராய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்