இலங்கை வீரர்களை இந்திய மிரட்டியதா... தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை கூறிய விளையாட்டு அமைச்சர் பெர்னாண்டோ

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய வேண்டாம் என்று இலங்கை வீரர்களுக்கு இந்தியா மிரட்டல் விடுத்ததாக பரவிய தகவல் தொடர்பில் அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விளக்கமளித்துள்ளார்.

பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய வேண்டாம் என்று இந்தியா அழுத்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இந்திய விளையாட்டு அதிகாரிகள் மலிவான தந்திரங்களை நாடுகிறார்கள் என்றும் அவர் ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் ஆணையம் தனது அணியை ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தானுக்கு அனுப்பியது, இருப்பினும் சிறந்த வீரர்கள் சிலர் சுற்றுப்பயணத்திலிருந்து விலகினர்.

இதனிடையே, இந்தியா மீதான பாகிஸ்தான் அமைச்சரின் குற்றச்சாட்டை, இலங்கை விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நிராகரித்துள்ளார்

பிசிசிஐ அவர்களின் முடிவில் தலையிட முயற்சிக்கவில்லை என்றும், ஆனால், ஃபவாதின் ட்விட் அவரை கடினமான சூழ்நிலைக்கு உள்ளாகியது என்று பெர்னாண்டோ கூறினார்.

பாகிஸ்தான் அமைச்சரின் குற்றச்சாட்டு பல சர்ச்சையை ஏற்படுத்தியது, ஏனெனில் மலிங்கா மட்டுமே ஐபிஎல் போட்டியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்

நான் செய்ததற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறு ட்விட் செய்ய சொல்லி, இந்திய உயர் அதிகாரிகள் உட்பட எல்லோரும் என்னுடன் உரையாட வேண்டிய சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டேன், அதுதான் உண்மை என்றார் பெர்னாண்டோ.

நாங்கள் பாகிஸ்தான் செல்ல விரும்புகிறோம், அந்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், பிரச்னை ஒன்றுமில்லை என நான் அவர்களிடம் கூறினேன்.

ஆனால், அங்கிருந்து அது வேறு பிரச்னையாக மாறியதுடன், இலங்கை இடையில் சிக்கியது. அதிர்ஷ்டசாவசமாக பிரச்னைகளில் இருந்து நாங்களாகவே வெளியேறினோம்.

மேலும் இந்தியாவும் எங்களுடடைய ஒரு பெரிய சகோதர நாடு, அவர்கள் எங்களுக்கு அருகில் இருக்கிறார்கள். அவர்களுடன் நாம் நல்லுறவு கொள்ள வேண்டும். பாகிஸ்தான் எப்போதுமே எங்கள் நண்பராக இருந்து வருகிறது, விளையாட்டு என்று வரும் போது அவர்கள் எப்போதுமே எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர் என்று பெர்னாண்டோ கூறினார்.

இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்துவது குறித்தும் பேசிய அமைச்சர், முறையான ஊழல் தடுப்பு மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் ஆசிய நாடு இலங்கை என்றும் கூறினார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்