இது முட்டாள்தனமான திட்டம்... கோஹ்லி-ரவி சாஸ்திரியை எச்சரித்த யுவராஜ் சிங்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
153Shares

இந்திய அணியில் இருந்து சுழந்பந்து வீச்சாளர்களை புறக்கணித்தது முட்டாள்தனமான திட்டம் என முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

சமீபத்திய இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் மற்றும் சாஹலுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்திய அணி கடைசி விக்கெட் வரை துடுப்பாட்ட வீரர்களை கொண்ட அணியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கோஹ்லி விளக்கமளித்தார்.

இந்திய அணியின் இந்த புதிய திட்டத்தை விமர்சித்த முன்னாள் வீரர் யுவராஜ் சிங், கடைசி விக்கெட் வரை இந்திய அணி துடுப்பாட வேண்டும் என்பது முட்டாள்தனமானது.

கடந்த 4 ஆண்டுகளாக ஐபிஎல் ஏலத்தில் பந்துவீச்சாளர்களை எடுக்க தான் கடுமையான போட்டி நிலவுகிறது. மட்டமான களத்தில் விளையாடும் போது பும்ரா, சாஹல், குல்தீப் போன்ற முக்கியமான பந்துவீச்சாளர்களை அணியில் கொண்டிருக்க வேண்டும்.

சிறந்து பந்து வீச்சாளர்கள் மூலமே டி-20 உலகக் கோப்பையை வெல்ல முடியும். இந்திய அணியில் கோஹ்லி, சர்மா என துடுப்பாட்ட வரிசை சிறப்பாக உள்ளது. எனவே, துடுப்பாட்டம் பற்றி எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், உலகக் கோப்பையை வெல்ல நமக்கு பந்து வீச்சாளர்கள் வேண்டும். கண்டிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் வேண்டும்.

என்னுடைய கூற்றுப்படி வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பந்தை சுலபமாக அடிக்கலாம், சுழற்பந்து வீச்சாளரின் பந்து தான் நமக்கு சவாலாக இருக்கும் என கூறினார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்