உலகச் சாம்பியன்ஷிப் தடகளத்தில், ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேன் தங்கப்பதக்கம் வென்றார்.
கத்தார் தலைநகர் தோகாவில் உலகின் அதிவேக மனிதர் யார் என்பதை தீர்மானிக்கும் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே, அதிவேக மனிதர் என பெயர் பெற்றிருந்த உசேன் போல்ட் ஓய்வு பெற்ற பின்னர் நடக்கும் முதல் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி இது என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியது.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 23 வயதான இவர், 100 மீற்றர் இலக்கை 9.76 வினாடிகளில் கடந்து அசத்தினார்.
இரண்டாவது இடத்தை, நடப்பு சாம்பியனான மற்றொரு அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் 9.89 வினாடிகளில் கடந்து பிடித்தார். கனடா வீரர் ஆண்ட்ரே டி கிராஸி 3வது இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்றார்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்