தேசிய அளவில் அதிகம் பாராட்டப்படும் ஆண்கள் பட்டியல்.. டோனி-கோஹ்லி பிடித்த இடங்கள் எவை தெரியுமா?

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
225Shares

இந்திய அளவில் அதிகம் பாராட்டப்படும் ஆண்கள் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான டோனி, கோஹ்லி ஆகியோர் முதன்மை இடங்களை பிடித்துள்ளனர்.

யுகவ் என்ற நிறுவனம் 2019ஆம் ஆண்டில் அதிகம் பாராட்டப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியது.

நாடுகள் மற்றும் உலக வாரியாக நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், 41 நாடுகளில் இருந்து 42,000 பேர் உலகில் மிகவும் போற்றப்பட்டவர்களின் பட்டியலை உருவாக்கினர்.

இந்நிலையில் இந்திய அளவில் அதிகம் போற்றப்படும் ஆண்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி 15.66 சதவிதம் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் டோனி, 8.58 சதவிதம் பெற்று 2வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.

PTI

மேலும், இந்திய அளவில் அதிகம் போற்றப்படும் பெண்கள் பட்டியலில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் 10.36 சதவிதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்த இடங்களில் கிரண்பேடி(9.46 %), லதா மங்கேஷ்கர்(9.23 %), சுஷ்மா சுவராஜ்(7.13 %), தீபிகா படுகோன்(6.35 %) ஆகியோர் உள்ளனர்.

உலக அளவில் அதிகம் போற்றப்படும் ஆண்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடத்தையும், பராக் ஒபாமா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்