தமிழருக்கு உதவி செய்து... பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்த ஹர்திக் பாண்டியா

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
551Shares

இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, தனது தீவிர ரசிகரின் மொத்த சிகிச்சை செலவையும் ஏற்றுள்ளார்.

இந்தியாவில் கிரிக்கெட் என்பது மதமாக பின்பற்றப்பட்டு வருகிறது. சச்சினுக்கு சுதிர் கவுதம், டோனிக்கு சரவணன் ஹரி போல பாண்டியாவுக்கும் முகுந்தன் என்பவர் தீவிர ரசிகராவார்.

கோயம்பத்தூரை சேர்ந்த முகுந்தன் பாண்டியா பெயரை 16 மொழிகளில் தனது உடலில் பச்சை குத்தியுள்ளார். ஹர்திக் பாண்டியாவின் மோசமான நேரத்திலும் அவருக்கு ஆதரவாக இருந்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாவை போலவே தனது முடியை அலங்கரித்து வந்துள்ளார் முகுந்தன், மேலும், இந்தியாவில் எங்கு போட்டி நடந்தாலும் பாண்டியாவின் ஆட்டத்தை காண சென்றுவிடுவாராம்.

Twitter

இந்நிலையில், உலகக் கோப்பை அடுத்து தர்மசாலாவில் நடைபெறவிருந்த இந்தியா-தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் ஹர்திக் ஆட்டத்தை காண முகுந்தன் சென்றுள்ளார்.

Twitter

3000 கி.மீ தூரத்தை சாலை மார்கமாக சென்ற போது Jabalpur-ல் விபத்தில் சிக்கியுள்ளார் முகுந்தன்.இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முகுந்தனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கோரியுள்ளனர்.

இந்நிலையில், முகுந்தன் குறித்த செய்தி பாண்டியாவின் காதுக்கு செல்ல, அவரின் சிகிச்சைக்கான மொத்த செலவையும் பாண்டியாவே ஏற்றுள்ளார். அறுவை சிகிச்சை பின் செப்டம்பர் 21ம் திகதி வீடு திரும்பியுள்ளார் முகுந்தன்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்