மீண்டும் யாக்கர் மன்னன்... மலிங்காவைப் போலவே பந்து வீசி திணறடித்த இலங்கை பள்ளி மாணவன்: வைரல் வீடியோ

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
338Shares

இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்காவைப் போலவே பள்ளி மாணவர் ஒருவர் அசத்தலாக பந்து வீசும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இலங்கையின் மூத்த வேகப்பந்து வீச்சாளரும், யாக்கர் மன்னனுமான லசித் மலிங்கா சமீபத்தில் சர்வதேச ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது, அவர் டி-20 போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கவே தான் ஓய்வு பெறுவதாக மலிங்கா தெரிவித்தார். தற்போது, இலங்கை அணியும் இளம் வீரர்களை ஊக்குவிக்கும் முனைப்போடு இருக்கிறது.

இந்நிலையில், இலங்கையில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட முதல் வகுப்பு கிரிக்கெட் போட்டியின் போது தனது முதல் போட்டியில் களமிறங்கிய Trinity College பள்ளி மாணவர் Matisha Pathirana 7 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

17 வயது வலது கை வேகப்பந்து வீச்சாளரான Matisha, இலங்கை ஜாம்பவான் மலிங்கா போலவே யாக்கர் பந்து வீசி துடுப்பாட்டகாரர்களை திணறடித்துள்ளார். இவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாகவும், இதுபோன்ற இளம் வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரியுள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்