தேசிய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர்... இலங்கை ராணுவத்தில் இணைந்தார்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
237Shares

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் தினேஷ் சந்திமல் இன்று செப்டம்பர் 26ம் திகதி இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ளார்.

இலங்கை தன்னார்வப் படையணியின் அதிகாரியாக தினேஷ் சந்திமல் சேவையாற்றவுள்ளார்.

சந்திமலின் கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாக மேஜர் ஜெனரல் அட்டப்பட்டு கூறினார். இதேவேளை, இலங்கை ராணுவ படையின் அதிகாரி என்பதால் இலங்கை ராணுவ கிரிக்கெட் அணிக்காக சந்திமால் விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் சந்திமால், எதிர்காலத்தில் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மேலும், தேசிய விளையாட்டு வீரர்கள் நால்வர் அடுத்த இரு வாரங்களில் ராணுவத்தில் இணையவுள்ளதாக இலங்கை ராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வலது கை துடுப்பாட்டகாரரான சந்திமலின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை சமீபத்திய காலங்களில் எதிர்பார்த்த விதத்தில் அமையவில்லை. அவர் தனது அணித்தலைவர் பதவியை மட்டுமல்லாமல், அணியில் தனது இடத்தையும் இழந்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்