பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.. பாகிஸ்தான் புறப்பட்ட இலங்கை அணி

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்
222Shares

ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட உள்ள இலங்கை அணி வீரர்கள் புத்தபிக்குகளிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு பாகிஸ்தான் புறப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 9 வரை நடைபெறவிருக்கும் ஒருநாள் மற்றும் 20ஓவர் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இலங்கை அணி இன்று புத்த பிக்குகளிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு புறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் செல்ல விருப்பமில்லை என இலங்கை அணியின் நட்சத்திர வீரர்கள், லசித் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்ட 10 வீரர்கள் பின்வாங்கியதை அடுத்து, ஒருநாள் மற்றும் டி 20 ஐ கேப்டன்கள் லஹிரு திரிமன்னே மற்றும் தாசுன் ஷானகா தலைமையில் இளம் அணி புறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அணியின் கேப்டன் தாசுன் ஷானகா கூறுகையில், எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு குறித்து நான் திருப்தி அடைகிறேன். எனது அணியை பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வலுவாக உள்ள எதிர் அணிக்கு ஒரு நல்ல சவாலாக இருப்போம் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்