ஸ்ரேயாஸ் ஐயர் மீது கடும் கோபம்.... ஸ்டம்ப்பை உடைத்த கோஹ்லி: சிக்கிய காட்சி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது.

இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.

2வது டி-20 போட்டியில் தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக இந்தியா முதலில் பந்து வீசியது. தென் ஆப்பரிக்கா இன்னிங்ஸின் 10வது ஓவரில், ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை துடுப்பாட்டகாரர் பவுண்டரி கோட்டிற்கு அருகே அடித்தார், அங்கு பீல்டிங் செய்துக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் பந்தை பிடிக்க தடுமாறினார்.

அதற்குள் டெம்பா பவுமா மற்றும் குயிண்டன் டி காக் ஆகியோரை கூடுதலாக ஒரு ஓட்டம் எடுத்தனர். அது மட்டுமல்லாமல், இதனையடுத்து, ஐயர் வீசிய பந்தை ஹர்திக் பாண்டியா பிடிக்க தவறவிட்டதால் ஓவர் த்ரோவில் மேலும் ஒரு ஓட்டம் ஓடினார்கள்.

இதனால் கோபமடைந்த கோஹ்லி உடனே அதை தனது ஆக்ரோஷமான செயல்பாட்டின் மூலமாக வெளிப்படுத்தினார். பந்தினை ஸ்டம்ப் அருகே பிடித்த கோஹ்லி, அப்படியே ஸ்டம்பை தகர்த்து ஆக்ரோஷமாக நடந்து சென்றார்.

துடுப்பாட்ட வீரர் கோட்டிற்குள் வந்ததும் கோஹ்லி கோபமாக ஸ்டம்ப்பை தகர்த்தது வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்