தவானுக்கு ஷாக் கொடுத்த மில்லர்.. வாயை பொளந்து வியந்து பார்த்த கோஹ்லி: வைரலாகும் வீடியோ

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியா அணிக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் பிடித்த கேட்ச்சை இந்திய அணித்தலைவர் கோஹ்லி வியந்து பார்த்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

மொஹாலியில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

போட்டியில் இந்திய இன்னிங்சின் போது 11வது ஓவரை தென் ஆப்பரிக்கா சுழற்பந்து வீச்சாளர் Shamsi வீச, துடுப்பாடிய தவான் பந்தை நேராக பறக்க விட்டார்.

பந்து பவுண்டரி செல்லும் என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிந்த போது, பவுண்டரி கோட்டிற்கு அருகே இருந்த மில்லர், ஓடி வந்து பறந்து ஒற்றை கையில் பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார்.

இதைக்கண்டு தவான் ஷாக் ஆக, மறுபுறம் இருந்த கோஹ்லி என்னா கேட்ச் டா என்ற வகையில் வாயை பொளந்து வியந்து பார்த்தார். குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதேசமயம், தென் ஆப்பிரிக்கா இன்னிங்சின் போது, டி காக் அடித்த பந்தை கோஹ்லி ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். குறித்த காட்சியும் இணையத்தில் பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்