சென்னையில் நடந்த கிரிக்கெட் சூதாட்டம்! மொத்தமாக சிக்கிய பணம் எவ்வளவு? அடுத்தடுத்து வெளியான தகவல்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சென்னை சூளைமேட்டில் இயங்கிவரும் விடுதி ஒன்றில் தங்கி, சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட விடுதிக்கு இரவு நேரத்தில் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 3 பேர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

அதில் ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்ற இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடந்த முதல் கட்ட விசாரணையில், அவர்களது பெயர் ராகுல் ஜெயின் மற்றும் தினேஷ் குமார் என்பதும், இருவருமே சென்னை சௌகார்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இருவரிடமுமிருந்து சுமார் 53 லட்ச ரூபாய் பணம், 3 செல்போன்கள், 3 லேப் டாப்கள் மற்றும் 2 பணம் கணக்கிடும் எந்திரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இவர்களிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் யார், யார் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சூதாட்டம் தொடர்பாக வெளிநாட்டு நபர்களிடம் இவர்களுக்கு ஏதேனும் தொடர்பு என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...