டோனி ஓய்வு குறித்து தலைமை தேர்வாளர் முக்கிய தகவல்: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

டோனி ஓய்வு குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் பதிலளித்துள்ளார்.

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, டோனியை புகழ்ந்து அவருடன் விளையாடிய பழைய போட்டியை நினைவு கூர்ந்து ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டார். இதனையடுத்து, டோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் பரவியது.

சில மணிநேரங்களில் டோனி இரவு 7 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். எனினும், டோனி தரப்பில் இருந்து அவ்வாறு எந்த செய்தியாளர் சந்திப்பிற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என விளக்கமளிக்கப்பட்டது.

எனினும், உலகக் கோப்பையை அடுத்து தற்போது வரை டோனி ஒரு போட்டியில் கூட விளையாடாததால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பரிக்கா அணி 3 டி-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது.

தென் ஆப்பரிக்கா உடனான டி-20 போட்டிக்கான இந்திய அணி முன்னரே அறிவிக்கப்பட்டது. அதில் டோனி இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், டோனி தான் தேர்வுக்கு முன்வரவில்லை என தேர்வாளர் பிரசாத் விளக்கமளித்தார்.

இதனிடையே, தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியை தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே.பிரசாத் நேற்று அறிவித்தார்.

இதன்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில், டோனியின் எதிர்காலம் குறித்து பிரசாதிடம் கேள்வி கேட்க்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், டோனியின் ஓய்வு குறித்து மேலதிக தகவல்கள் ஏதும் இல்லை, அவர் ஓய்வு அறிவிக்க உள்ளார் என வெளியான செய்தி தவறானது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்