ஜாம்பவான் செரீனாவை வீழ்த்திய 19 வயது கனேடிய வீராங்கனை: வெளியான நெகிழ்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை வீழ்த்திய கனேடிய வீராங்கனை பியான்காவின் பின்னணி வெளியாகியுள்ளது.

ஒருமணி நேரம் 41 நிமிடங்கள் நீடித்த இறுதிப் போட்டியில் முதல் செட்டை 6-3 என்று செரீனாவுக்கு இடமே தராமல் கைப்பற்றினார் கனேடிய வீராங்கனை பியான்கா.

இரண்டாவது செட்டில் அதைவிட ஆக்ரோஷமாக விளையாடிய அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் செரீனாவும் ஆக்ரோஷமாக போட்டி விறுவிறுப்பானது.

இறுதியில் 7-5 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி செரீனாவை வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார் பியான்கா.

தனது அறிமுக தொடரிலேயே அமெரிக்கா ஓபன் டென்னிஸ் கிண்ணத்தை கைப்பற்றிய பியான்கா, முதல்முறை கிராண்ட்ஸ்லாம் வெல்லும் கனேடிய வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

சாதனை படைத்த பியான்காவிற்கு 27 கோடியே 50 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தற்போது கனடாவில் குடியிருந்து வரும் பியான்காவின் சொந்த நாடு கனடா கிடையாது.

ரோமானியா நாட்டை பூர்விகமாக கொண்ட பியான்காவின் பெற்றோர் இரண்டு சூட்கேஸ்களுடன் கனடா நாட்டுக்கு புலம்பெயர்ந்தவர்கள்.

பின்னர் கனடாவிலேயே பியான்கா பிறக்க அங்கேயே அவர் வளர்ந்துள்ளார். சிறுவயது முதலே டென்னிஸில் கவனம் செலுத்திவரும் பியான்கா ஒரு சுவாரஸ்ய சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார்.

சரியாக 2016ம் ஆண்டு பியான்கா அப்போது 16 வயது. உள்ளூர் போட்டியில் வென்ற பின் காசோலையில் யு.எஸ் ஓபனை வென்றது போல் தனது பெயரையும் அதற்கான பரிசுத்தொகையையும் போலியாக எழுதிவைத்துள்ளார்.

ஒருநாள் அதனை உண்மையாகவே வெல்ல வேண்டும் என்று நினைத்து அதற்கான தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

சரியாக மூன்றே ஆண்டுகளில் தான் நினைத்ததுபோலவே லட்சியத்தை அடைந்துள்ளார்.

அதுவும் டென்னிஸ் உலகின் ஜாம்பவான் வீராங்கனையை வீழ்த்தி. எந்த காசோலையில் தனது பெயரை போலியாக லட்சியத்துக்கு உந்துதலாக நினைத்தாரோ.. அதே காசோலையில் இன்று அவர் பெயர் உண்மையிலேயே பொறிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்