நான் அங்கு சென்றது தவறு தான்! பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்.. காரணம் என்ன?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

கரீபியன் பிரீமியர் லீக் விழாவில் தான் கலந்துகொண்டதற்காக இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக், பிசிசிஐ-யிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்திய அணி வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தலைவருமான தினேஷ் கார்த்திக், அண்மையில் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் துவக்க விழாவில் கலந்துகொண்டு, நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான டி.கே.ஆர் எனும் அணியின் சீருடையை அணிந்து வீரர்களின் ஓய்வறையில் தங்கியிருந்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த பிசிசிஐ நிர்வாகம், தங்களிடம் உரிய அனுமதி பெறாமல் வெளிநாட்டில் நடக்கும் ஒரு கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டது ஏன் என தினேஷ் கார்த்திக்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், இது தொடர்பாக விளக்க கடிதம் எழுதியுள்ள தினேஷ் கார்த்திக், ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் பிரெண்டன் மெக்கலம், டி.கே.ஆர் அணிக்கும் பயிற்சியாளராக உள்ளதால், கரீபியன் பிரீமியர் லீக் விழாவில் தான் கலந்துகொண்டால் ஒரு தலைவராக அது உதவிகரமாக இருக்கும் என கருதினார்.

அந்த அடிப்படையிலேயே தான் அங்கு சென்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் பிசிசிஐயிடம் முன் அனுமதி பெறாமல் அங்கு சென்றது தவறுதான் என தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக் தனது செயலுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்