களத்தில் இறங்க தயாரான ஸ்ரீசாந்த்: வாழ்நாள் தடையை குறைத்து அதிகாரி அறிவிப்பு!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக வலம்வந்த ஸ்ரீசாந்த் கடந்த 2013ம் ஆண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இவருடன் சேர்த்து அந்த அணியில் விளையாடிய அஜித் சண்டிலா மற்றும் அங்கீத் சவான் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஸ்ரீசாந்த், வழக்கில் தன்னை குற்றமில்லாதவர் என நிரூபித்தார். அதனை தொடர்ந்து ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேருக்கும் வாழ்நாள் தடை விதித்து இந்திய கிரிக்கெட் போர்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து ஸ்ரீசாந்த் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி, இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஸ்ரீசாந்த்தின் தண்டனையை குறைப்பது குறித்து பரிசீலிக்கும் படி உத்தரவிட்டது.

இந்த நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரியான முன்னாள் நீதிபதி ஜெயின் ஸ்ரீசாந்த் குறித்து முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அதில், ஸ்ரீசாந்த் கடந்த 13.09.13 முதல் 7 ஆண்டுகளுக்கு எந்த வகையான வணிக கிரிக்கெட்டிலும் பங்கேற்கவோ அல்லது பி.சி.சி.ஐ அல்லது அதன் துணை நிறுவனங்களின் எந்தவொரு நடவடிக்கைகளுடனும் தொடர்பு கொள்ளவோ தடை விதிக்கப்பட்டிருந்தது.

அவருக்கு பிசிசிஐ., ஒழுங்கு கமிட்டி விதித்த தடைக்காலம் அடுத்த வருடம் ஆகஸ்டு மாதத்துடன் முடிவுக்கு வருகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்