பந்து வீச்சில் சர்ச்சை: இலங்கை வீரர் தனஞ்செய.. நியூசிலாந்து தலைவர் வில்லியம்சன் சிக்கினர்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை காலி மைதானத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. மேலும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

நியூசிலாந்த அணிக்கு எதிரான காலி டெஸ்டில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்செய சிறப்பாக பந்த வீசி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட் என மொத்தம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல், இராண்டாவது இன்னிங்ஸின் போது இலங்கை அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மூன்று ஓவர்களை வீசினார்.

காலியில் நடந்த முதல் டெஸ்டைத் தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான விதத்தில் பந்துவீசியதாக நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் இலங்கை பந்து வீச்சாளர் அகிலா தனஞ்செய இருவரும் மீதும் புகார் செய்யப்பட்டுள்ளது.

இரு அணிகளின் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட போட்டி அதிகாரிகளின் அறிக்கையில், இரு வீரர்களின் பந்துவீச்சு நடவடிக்கைகளின் சட்டபூர்வமான தன்மை குறித்த கவலைகளை மேற்கோளிட்டுள்ளது.

வில்லியம்சன் மற்றும் தனஞ்செய இப்போது அறிக்கை வெளியிட்ட ஆகத்து 18ம் திகதியிலிருந்து 14 நாட்களுக்குள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், மேலும் இந்த காலகட்டத்தில் சோதனை முடிவுகள் அறியப்படும் வரை இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து பந்துவீச அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்