கிரிக்கெட் வீரர்கள் மைதானத்திலே இறந்து விடுவார்கள்: எச்சரிக்கும் மருத்துவர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

ஆஷஸ் தொடரின் போது பந்து கடுமையாக தாக்கியதில் ஸ்மித் தரையில் சுருண்டு விழுந்ததை அடுத்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் மருத்துவர் கழுத்து பகுதியில் பாதுகாப்பு கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கெதிரான நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது 148கிமீ வேகத்தில் ஆர்ச்சர் வீசிய பந்து, அவுஸ்திரேலிய மட்டையாளர் ஸ்மித் கழுத்து பகுதியில் பயங்கரமாக தாக்கியது.

இதில் அவருடைய மூளைப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டு மைதானத்திலே மயங்கி விழுந்தார். இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு நிலையில், மட்டையாளர்கள் கழுத்து பகுதியில் பாதுகாப்பு கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் மருத்துவர் பீட்டர் ப்ரூக்னர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்மித் என பல வீரர்கள் சாக்குபோக்குகளை முன்வைத்து கழுத்து பகுதிக்கான பாதுகாப்பு கவசத்தை அணிவது கிடையாது.

எங்கள் சிறந்த வீரர்கள் பலர் அவற்றை அணிவதில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது பவுன்சர் பந்து தலையில் பட்டதில் பிலிப் ஹியூஸ் சரிந்து விழுந்தார். அவர் தனது 26 வது பிறந்தநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் காயங்களுடன் இறந்தார்.

கிரிக்கெட் ஆடுகளத்தில் வேறு யாரும் தங்கள் உயிரை இழக்க மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த, பாதுகாப்பு கவசத்தை கட்டாயமாக்க வேண்டும். இது ஒரு அரிய நிகழ்வு தான் என்றாலும் கூட ஒப்பீட்டளவில் நாம் மரணம் நிகழாமல் பார்த்துக்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்