மேற்கிந்திய தீவுகளில் உள்ள இந்திய வீரர்களின் உயிருக்கு ஆபத்து...! பிசிசிஐ முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு பாதுகாப்பு அச்சுற்றுத்தல் இருப்பதாக வெளியான தகவல்கள் தொடர்பில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.

ஆண்டிகுவாவில் மேற்கிந்திய தீவுகள் ஏ அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை, மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள இந்திய அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து பிசிசிஐ-க்கு மின்னஞ்சல் வந்ததாக தகவல் வெளியானது.

இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, அதில், இந்திய அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவல் "புரளி" என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியது.

பிசிசிஐ மூத்த அதிகாரி கூறியதாவது, நாங்கள் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தகவல் கொடுத்துள்ளோம், இது ஒரு புரளி மின்னஞ்சல் என்று கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அணியின் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லாமல் இருக்க பிசிசிஐ அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

நாங்கள் ஆன்டிகுவாவில் உள்ள இந்திய உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம், அவர்கள் அங்குள்ள உள்ளுர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். பாதுகாப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது, தேவைப்பட்டால் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். இப்போதைக்கு, அவர்கள் சிறப்பான பாதுகாப்பைப் பெறுகிறார்கள் என அதிகாரி கூறினார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்