அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர்!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷேசாத் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஒரு வருடம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான முகமது ஷேசாத், அந்த நாட்டின் கிரிக்கெட் வாரிய (ஏசிபி) நடத்தை விதிகளை மீறியதாக கடந்த சில தினங்களுக்கு முன் அவருடைய ஒப்பந்தம் "காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டது".

இந்த நிலையில் அவர் கிரிக்கெட் வாரிய ஒழுங்கு விதிகளை மீறியதற்காக 12 மாத காலத்திற்கு அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வீரர்களுக்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடத்தை விதிமுறைகளை ஷேசாத் பின்பற்றவில்லை. விதிமுறைகளை மீறி அவர் பலமுறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். அவ்வாறு செல்வதற்கு முன்னர் அவர் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

கிரிக்கெட் வாரியம் நாட்டிற்குள் நன்கு பொருத்தப்பட்ட பயிற்சி வசதிகளை கொண்டிருக்கிறது. இதற்காக வீரர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரைத் தளமாகக் கொண்ட சேஷாத், 2019 உலகக் கோப்பை போட்டிகளில் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்