இனி பழைய டோனிய எதிர்பாக்குறதே வேஸ்ட்.. ஓரங்கட்டுங்க! இந்திய வீரர் அதிரடி பேச்சு

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

டோனி விஷயத்தில் கடுமையான முடிவு எடுக்க வேண்டிய தேர்வாளர்கள் குறித்து அண்மையில் இந்திய துடுப்பாட்டகாரர் மனோஜ் திவாரி கருத்து தெரிவித்துள்ளார்.

மனோஜ் திவாரி அளித்த பேட்டியில் கூறியதாவது, டோனி நம் நாட்டுக்காக நிறைய செய்துள்ளார். இந்த அணிக்கு அவர் நிறைய பங்களிப்புகளைச் செய்துள்ளார். சமீபத்தில், டோனி நிறைய விளையாடியுள்ளார், அவர் தனான விலக வேண்டிய நேரம் இது என்று கூறினார்.

அணிக்கு டோனி தேவை என்று விராட் கோஹ்லி கூறியிருந்தாலும், தேர்வாளர்கள் கடுமையான முடிவை எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். துணிச்சல் காட்ட வேண்டிய நேரம் இது, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று திவாரி மேற்கோளிட்டுள்ளார்.

சமீபகாலமாக டோனியின் செயல்திறன் கணிசமாகக் குறைந்துவிட்டது. இது ஒரு இன்னிங்ஸ் அல்லது இரண்டு போட்டிகளில் மட்டுமே இருந்திருந்தால் நான் சொல்லியிருக்க மாட்டேன். கடந்த காலத்தின் அடிப்படையில் தேர்வாளர்கள் டோனிக்கு வாய்ப்புகளை அளிக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.

நம் நாட்டில் திறமையான கிரிக்கெட் வீரர்கள் பலர் உள்ளனர், அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். இந்திய அணி யாருடைய தனிப்பட்ட சொத்து அல்ல. இது தேசத்தின் அணி, அதை மனதில் கொள்ள வேண்டும் என்று திவாரி கூறினார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்