பாகிஸ்தான் வீரர்களால் பாராட்டப்பட்ட யுவராஜ் சிங்: இதயங்களை வென்ற இணையதள உரையாடல்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், யுவராஜ் சிங்கின் சேவையை பாகிஸ்தான் அணி வீரர்கள் புகழ்ந்து பேசியிருப்பது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அரசியல் முன்னணியில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் யுவராஜ் சிங் துவங்கியிருக்கும் அறக்கட்டளை நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தோன்றி, மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையினை மாற்றவிருக்கும் யுவராஜின் தொண்டு பணிகளைச் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார்.

அதேபோல பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சோயப் மாலிக், யுவராஜ் சிங்கின் சேவையை ட்விட்டரில் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த அரசியலுக்கு அப்பாற்பட்ட இணையதளவாசிகள், மூன்று பேரும் இதயங்களை வென்றுவிட்டதாக பாராட்டி வருகின்றனர்.

நடந்து வரும் குளோபல் டி 20 கனடா போட்டியில் யுவராஜ், மாலிக் மற்றும் அஃப்ரிடி ஆகியோர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்